ETV Bharat / city

தேர்விற்கு மினி ஜெராக்ஸ் எடுக்கச்சென்ற மாணவர்கள் - எச்சரித்து அனுப்பிய தேர்வு கண்காணிப்பு அலுவலர் - school Students

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் நூதன முறையில் பிட் அடிப்பதற்கு ஜெராக்ஸ் போட்டு எடுத்துச் செல்வது மாநில அளவிலான அதிகாரி மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேர்விற்கு மினி ஜெராக்ஸ் எடுக்க சென்ற மாணவர்கள்-  எச்சரித்து அனுப்பிய தேர்வு கண்காணிப்பு அலுவலர்

author img

By

Published : May 17, 2022, 3:29 PM IST

Updated : May 17, 2022, 4:25 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியப்பாடமான கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் தேர்வுகள் இன்று நடைபெற்றன. அதேபோல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 16ஆம் தேதி தாவரவியல், உயிரியியல், வரலாறு ஆகிய முக்கியப்பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

பொதுத்தேர்வினை கண்காணிக்க ஐஏஎஸ் அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தேர்வில் முறைகேடான செயலில் ஈடுப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான தண்டனைகளும் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு தேர்வு கண்காணிப்பு அலுவலராக தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்.குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 9ஆம் தேதி நாமக்கல் எஸ்ஆர்வி எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு செய்த போது, அப்பள்ளியின் முதல்வர் வளாகத்திற்குள் உள்ளே இருப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதேபோல் 16ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆய்வுக்குச்சென்றபோது ஜெராக்ஸ் கடையில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்விற்கு முன்னதாக மைக்ரோஜெராக்ஸ் போட்டு எடுத்துச்செல்வதைப் பார்த்துள்ளார். அதனைத்தொடர்ந்து செங்கரை அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப்பள்ளியின் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளருக்கு அறிவுரை கூறி மாணவர்களிடம் இருந்த பிட் பேப்பர்கள் அனைத்தும் தேர்விற்கு முன்னதாகவே பறிமுதல் செய்துள்ளனர்.

தேர்விற்கு மினி ஜெராக்ஸ் எடுக்கச்சென்ற மாணவர்களை எச்சரித்து அனுப்பிய தேர்வு கண்காணிப்பு அலுவலர்

மேலும் ஜெராக்ஸ் கடையில், இதுபோன்ற பணிகளை செய்தால் மூடுவோம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கு, விலங்கியல் தேர்வான இன்று நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களை ஆய்வு செய்தபோது, தேர்வு தொடங்குவதற்கு முன்னரே மாணவர்களிடம் இருந்த பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அரசுத்தேர்வுத்துறை கடுமையான விதிமுறைகளை வகுத்து, தேர்வு முறைகேடுகள் இல்லாமல் நடத்த முயற்சித்தாலும், அதனை முற்றிலும் தடுப்பதற்குப் பணியில் உள்ள ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது என அலுவலர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கோவை தனியார் பள்ளி நிர்வாக தேர்தல்: வாக்குவாதம் செய்தவரை அடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்?

Last Updated : May 17, 2022, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.