கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீப் கடந்த 8ஆம் தேதி ஐஐடி கல்லூரி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்து கொள்வதற்கு பேராசிரியர்களின் துன்புறுத்தலே காரணம் என்று மூன்று பேராசிரியர்களின் பெயரைக் குறிப்பிட்டு, எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பு ஒன்று அவரின் செல்போனில் இருந்தது.
இந்நிலையில், மாணவியின் செல்போன் லாக் செய்யப்பட்டு இருந்ததால், அதை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என கடந்த வாரம் ஃபாத்திமாவின் பெற்றோர்கள் முன்னிலையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், தடயவியல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
தடயவியல் துறை முதற்கட்ட ஆய்வறிக்கையை ஃபாத்திமா வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு வழங்கியுள்ளது. அதில் செல்போனில் உள்ள தற்கொலை குறிப்பு பொய்யானது அல்ல என குறிப்பிட்டுள்ளதாக, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இதன்மூலம் பேராசிரியர்கள் மாணவியை துன்புறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, மாணவியின் தற்கொலை தொடர்பாக பேராசிரியர்களிடம் மீண்டும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: பாத்திமா தற்கொலைக்கு நீதி விசாரணை வேண்டி காங்கிரஸ் மாணவர் அமைப்பு போராட்டம்!