சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள 5,574 சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ருக்மாங்கதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மண்டல அதிகாரி ராம் பிரதீபன் ஆகியோர் காணொலி மூலம் ஆஜராகியிருந்தனர். அப்போது, விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, ஐந்தாவது மண்லடத்தைப் போல பிற மண்டலங்களில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்வதாக உறுதியளித்தார்.
அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: தொடர் கொலை மிரட்டல்! - பாதுகாப்பு கேட்கும் பெண் ஊராட்சி மன்றத் தலைவர்!