ETV Bharat / city

தேச பாதுகாப்பிற்கு எதிரான கருத்தை வெளியிடும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்... எல். முருகன் எச்சரிக்கை - L Murugan

தேசத்திற்கு எதிராக கருத்துக்களை கூறிய பத்து சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அத்தகைய கருத்துகளை வெளியிடும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இணையமைச்சர் எல்.முருகன்
இணையமைச்சர் எல்.முருகன்
author img

By

Published : Aug 20, 2022, 11:36 AM IST

தூத்துக்குடி: சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையிலும், அவர்களது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (ஆக. 20) ஒண்டிவீரன் நினைவு தபால் தலை மத்திய அரசு மூலமாக வெளியிடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று (ஆக. 19) தூத்துக்குடி விமானநிலையம் வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,"நம் இந்தியா சுதந்திரம் அடைந்து 100ஆவது ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 100ஆவது சுதந்திர தினத்தில் இந்தியா போற்றப்படக்கூடிய நாடாகவும், வளர்ச்சி அடைந்த நாடாகவும், அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க கூடிய நாடாகவும் இருக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்த ஆசாதி அம்ருத் மகா உற்சவத்தின் ஒரு பகுதியாக, அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் நிலை குறித்து, தமிழ்நாட்டில் குறிப்பாக, வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வேலுநாச்சியார் அவர்களுடைய கதையை நாம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கிறோம்.

நாளை (அதாவது இன்று), ஒரு மிக முக்கியமான நாளாக, வீரன் ஒண்டிவீரன் அவர்களின் 251ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவருடைய நினைவு தினத்தை போற்றும் விதமாகவும், அவருடைய வீரத்தை அங்கீகரிக்கும் விதமாகவும் மத்திய அரசாங்கத்தின் சார்பில் திருநெல்வேலியில் அவரின் தபால் தலை வெளியிட இருக்கிறது.

தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி வெளியிட, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செவுந்தரராஜன் பெற்றுக் கொள்ள இருக்கிறார். மேலும், பி வோஸ் என்று சொல்லக்கூடிய மாஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சார்பில் அறியப்படாத ஹீரோஸ் என்ற தலைப்பில் பத்து நாள்கள் நடைபெறக் கூடிய கண்காட்சியை நடத்த திருநெல்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென் தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து போரிடுவதில் அதிகமான தலைவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொருவருடைய வரலாறும், ஒவ்வொருவருடைய வீரமும், ஒவ்வொருவருடைய போற்றுதலும் இன்றைய சமுதாயத்திற்கு தெரிய வேண்டும். எனவே, இந்த நிகழ்ச்சிகளை மத்திய அரசு சார்பில் நடத்தப்படுகிறது" என்று கூறினார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும், சமூக ஊடகங்களில் அவதூறாக பல கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எல். முருகன், "கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தில் முக்கியமான ஒன்று. ஆனால், அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராக, இந்திய ராணுவத்துக்கு எதிராக, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக, ஏதாவது நிறுவனம் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஒரு மாதமாக 100க்கும் மேற்பட்ட யூ-ட்யூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்றும் (அதாவது ஆக. 18) இந்திய நாட்டிற்கு எதிராக, தேசத்திற்கு எதிராக கருத்துக்களை சொன்ன பத்து சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில சமூக ஊடகங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அங்கிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேசத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் எந்த யூ-ட்யூப் சேனாலாக இருந்தாலும், எந்த ஒரு சமூக ஊடகமாக இருந்தாலும் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: படிப்பில் கவனம் செலுத்தாத மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.