சென்னை: மனோகரன் என்பவர் தங்களது நிறுவனம் வழங்கிய தனியா பாதுகாப்பற்றது என உணவுப் பாதுகாப்புத் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், உணவுக் கலப்படத்தைத் தடுக்க தனித் துறை அமைக்கப்பட்டுள்ளபோதும், கலப்படம் அதிகளவில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணவு கலப்படத்தைத் தடுக்கும்வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உணவு கலப்படம் தொடர்பாக பொதுமக்கள் உடனடியாகப் புகாரளிக்கும் வகையில் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை வாட்ஸ்அப் எண்களை வைக்க அறிவுறுத்த வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கலப்பட உணவு தொடர்பான புகாருக்கு அபராதம் விதித்தல் மட்டும் போதாது, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பனைப்பொருள்களில் கலப்படம்: உணவுப் பாதுகாப்புத் துறை பதிலளிக்க உத்தரவு