ETV Bharat / city

முதலமைச்சர் தொகுதியில் 36 மணி நேரத்தில் முடிக்கப்பட்ட மழை நீர் வடிகால் பணி! - கொளத்தூர் சட்டமன்ற தொகுதி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான கொளத்தூரில் 36 மணி நேரத்தில் மழைநீர் வடிகால் பணியை முடித்ததாக மாகராட்சி தெரிவித்துள்ளது.

மழை நீர் வடிகால் பணி
மழை நீர் வடிகால் பணி
author img

By

Published : Oct 4, 2022, 7:17 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் மழைநீர் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூம்புகார் நகர் மற்றும் முதல் பிரதான சாலை, கொளத்தூர் பிரதான சாலை மற்றும் பேப்பர்மில்ஸ் சாலையான லட்சுமி அம்மன் கோயில் சந்திப்பு மற்றும் வேலவன் நகர் சந்திப்பு ஆகியப் பகுதிகளில் ரூ.7.92 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், பரபரப்பான இந்த சாலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சராசரியாக முடிக்க ஒரு மாத காலமாகும். ஆனால், மாநகராட்சிப்பணியாளர்கள், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவற்றின் கூட்டு ஒருங்கிணைப்பாலும் Pre cast elements வேலைகள் மூலமாகவும் புதிய மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய்ப்பணிகள் 36 மணி நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.