ETV Bharat / city

நடிகர் விஷால் வீட்டின் மீது  தாக்குதல் - Vishal Film Factory

சென்னையில் உள்ள நடிகர் விஷாலின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 27, 2022, 10:50 PM IST

சென்னை: நடிகர் சங்க பொது செயலாளராக உள்ள நடிகர் விஷாலின் வீட்டின் மீது நேற்று (செப்.26) காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய நிலையில் போலீசார் இதுகுறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் விஷால் அண்ணா நகர் 12ஆவது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் நேற்றிரவு காரில் வந்த அடையாளம் தெரியாத சிலர் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனால் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்தன. இச்சம்பவம் குறித்து விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். நடிகர் விஷால் படப்பிடிப்பு சம்பந்தமாக வெளிநாட்டிற்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

கல்வீச்சு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

இதையும் படிங்க: ’அதிமுகவினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ - திருமாவளவன் எச்சரிக்கை

நடிகர் விஷால் வீட்டின் மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.