ETV Bharat / city

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை...! - ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்

சென்னை: ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள்...

bore wells
author img

By

Published : Oct 26, 2019, 7:36 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணிகள் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது.

இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும் அதை தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியவும் மத்திய நீர்வள அமைச்சகம் 2009ஆம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவினர் ஆழ்துளைக் கிணறுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், விபத்து நடைபெறாமல் தடுப்பது குறித்த நடவடிக்கை பற்றியும் பரிசீலித்தது. பின்னர் இந்தக் குழு மத்திய மாநில அரசுகள் ஆழ்துளை விபத்துகளைத் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை உருவாக்கியது.

மத்திய அமைச்சகம் போன்று உச்ச நீதிமன்றமும் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவதை தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இரண்டு முறை அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு 2010 பிப்ரவரி 11, ஆகஸ்ட் 6 ஆகிய இரண்டு தேதிகளில் வெளியிடப்பட்டது. அந்த உத்தரவில் உள்ளனவற்றை பின்பற்றுமாறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளைச் சுற்றிலும் வேலிகள் அமைக்க வேண்டும். அந்தக் கிணறுகளிடத்தில் குழந்தைகள் செல்லாத வகையில் ஏதேனும் தடுப்புகளை உருவாக்கிட வேண்டும்.

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடிகளைக் கொண்டு மூட வேண்டும். இல்லையெனில் அந்தக் குழாய்களில் மணல், களிமண், கூழாங்கற்களைக் கொண்டு முழுவதுமாக நிரப்பிட வேண்டும்.

மேலும் நகர்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை அந்தப் பகுதிக்குள்பட்ட பஞ்சாயத்து, நகராட்சி, பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு, உச்ச நீதிமன்றம் ஆகியவை இத்தனை வழிகாட்டுதல் நடைமுறைகளைப் பின்பற்ற மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ள போதிலும் அவ்வப்போது ஆழ்துளையில் குழந்தைகள் விழுந்துகொண்டுதான் உள்ளன. காரணம் அரசின் இந்த விதிமுறையை மக்கள் பின்பற்றாததும் அவற்றை அரசு அலுவலர்கள் முறையாகக் கண்காணிக்காததும்தான்.

Intro:Body:

Policy for Open Borewells https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=98661 

Press Information Bureau Government of India Ministry of Water Resources 

Policy for Open Borewells Government is aware of occurrence of such incidents of small children falling into open borewells. The Honourable Supreme Court has directed all the States & UTs through Orders dated 11th February, 2010 and 6th August, 2010, to take preventive actions on cases of children falling in borewells. The action taken by the State Governments on the directives issued by the Hon’ble Supreme Court is given at Annexure. 

A committee was constituted by the Ministry of Water Resources in March, 2009 to examine possibilities of preventing such fatal accidents, look into the legal and statutory measures available, action required for preventing such accidents and to suggest other administrative and technical measures for prevention of such accidents. The Committee had framed guidelines to be followed by the States/ Union Territory Governments for this purpose. 

The Honourable Supreme Court has directed all the States to cap all discarded and abandoned borewells in their territories and to properly fence all the working wells to prevent small children falling into them, erecting barbed wire fencing or any other suitable barrier around the well during construction, filling of abandoned tubewells by clay/sand/ boulders/ pebble. from bottom to ground level. Further, the Hon’ble Supreme Court has directed that in rural areas, monitoring and execution should be done by Panchayat Raj Institutions and in urban areas by the Municipal Corporations/ Public Health Departments. 

This information was given by Union Water Resources Minister Shri Harish Rawat in the Rajya Sabha today in reply to a written question. 

****** 

ST/- 

1 of 1 26-10-2019, 14:24 

26-August-2013 15:26 IST 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.