சென்னை: யானைகள் உயிரிழப்பு மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (செப். 5) விசாரணைக்கு வந்தன.
அப்போது, வனத்துறை சார்ப்பில், வனப்பகுதியில் இதுவரை 11 யானைகள் வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளது. 9 இடங்களில் யானைகள் வழித்தடம் பாதிக்காத வகையில் சுரங்கப்பாதை கட்டுமானங்கள் முடிந்துள்ளது. மீதிமுள்ள இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே துறை தரப்பில், சோதனை முயற்சியாக யானைகள் அதிகம் கடக்கும் மதுக்கரை முதல் வாளையாறு பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 லட்சம் ரூபாய் செலவில் கண்கானிப்பு கேமராக்கல் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்து 1 கிலோ மீட்டர் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தண்டவாளங்களில் யானைகள் கடந்தால் கண்கானிப்பு மையத்திலுருந்து தகவல்கள் அனுப்பப்பட்டு ரயில்கள் உடனடியாக நிறுத்தப்படும். விபத்துக்களை தவிர்க்கும் விதமாக 13 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் முதல் ஆகஸ்ட் வரை ரயில் விபத்தில் வன விலங்குகள் உயிரிழக்கவில்லை.
வனப்பகுதியில் சில தனியார்கள் தங்கள் நிலங்களை சுற்றி மின்வேலிகளை அமைத்துள்ளதால், யானைகள் வழித்தடம் மாறி தண்டவாளங்களுக்கு வந்து விடுகின்றன என தெரிவித்தார்.
இதையடுத்து, வனப்பகுதியில் யானைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மின் வேலிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், யானைகள் வருகையை தெர்மல் சென்சார் பயன்படுத்தி, ரயில் டிரைவருக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும்,
வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை காப்பிடப்பட்ட கம்பிகளாக மாற்றுவதால், வன விலங்குகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தவிர்க்க முடியும் என ரயில்வே தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி... யானை தந்தத்தால் ஆன சிற்பத்தின் பாகம் கண்டெடுப்பு