ETV Bharat / city

ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி உத்தரவு - கல்வி உதவித்தொகை

ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி உத்தரவு

author img

By

Published : Feb 13, 2022, 4:16 PM IST

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை முதன்மைச் செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில், மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 2020-2021ஆம் ஆண்டு முதல் பராமரிப்புப்படி உயர்த்தி வழங்கப்பட்டுவரும் விகிதத்திற்கு இணையாக மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

அதனடிப்படையில் பள்ளிக் கல்வி முதல் உயர் கல்வி வரை பயிலக்கூடிய ஆதி திராவிட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித் தொகைக்கு இணையாகத் தமிழ்நாடு அரசும் உயர்த்தியுள்ளது.

scholarship for adi dravida students
ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி உத்தரவு

அதன்படி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையும், ஐடிஐ, மூன்று ஆண்டு டிப்ளமோ மாணவர்களுக்கு விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 2,100 லிருந்து ரூ. 4,000 ரூபாயாகவும்,

தினசரி வீடு சென்றுவரும் மாணவர்களுக்கு ரூ. 1,200 லிருந்து ரூ. 2,500 ரூபாயாகவும், தொழிற்கல்விப் படிப்பில் டிப்ளமோ, டிகிரி படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு ரூ. 2,700 லிருந்து ரூ. 9,500ஆகவும் தினசரி வீடு சென்று வரும் மாணவர்களுக்கு ரூ. 1,680 லிருந்து ரூ. 6,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு ரூ. 2100 லிருந்து ரூ. 6000 எனவும், தினசரி வீட்டிற்கு வந்து செல்லும் மாணவர்களுக்கு ரூ. 1200 லிருந்து ரூ. 6000 என உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 4,200 லிருந்து ஆண்டுதோறும் ரூ. 13,500 ஆகவும் தினசரி வீடு சென்று வருபவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த ஆண்டுத் தொகை ரூ. 2,100 லிருந்து இனி ரூ. 7,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தற்போது தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் கல்வி உதவித் தொகை மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள்'- சென்னை ஐஐடி புதிய இயக்குநர் காமகோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.