மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு மறுவரையறையை முழுமையாக முடிக்காமல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சிப்பதாக திமுக, செ.கு. தமிழரசன் உள்ளிட்ட 12 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி பாப்டே, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் தேர்தல் ஆணையர் பழனிசாமி, செயலர் சுப்பிரமணி, சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:
"நிராகரிக்கப்பட்டது போதும்; நிலைமை மாறட்டும்" - திருநங்கைகள் ஆவண மையம்