ETV Bharat / city

விவசாயிகளை ஏமாற்றும் விஷவாயு எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் கடும் தாக்கு

author img

By

Published : Sep 28, 2020, 5:06 PM IST

காஞ்சிபுரம்: தான் விவசாயி என்று கூறி கொண்டு விவசாயிகளை ஏமாற்றி கொண்டிருக்கும் விஷவாயுதான் எடப்பாடி பழனிசாமி என திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

dmk leader stalin
dmk leader stalin

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையில் அதன் தோழமைக் கட்சிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது, விவசாய விளைநிலங்களில் வேலை பார்த்து வந்த பெண்களை சந்தித்து அவர்களது குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார். கரோனா பரிசோதனை மேற்கொண்ட 100 பேர் மட்டும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள்

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், "மத்திய மாநில அரசுகள் இணைந்து விவசாயிகளை வஞ்சிக்கின்றன. தன்னை ஏழை தாயின் மகன் என்று கூறும் மோடி, அனைவரையும் ஏழையாக்கி வருகிறார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பஞ்சாப், ஹரியானா, கர்நாடகத்திலும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. விவசாயிக்கு எதிரான சட்டத்திற்கு அதிமுக அரசு நாடாளுமன்றத்தில் ஆதரவு கொடுத்துள்ளது.

தான் விவசாயி என்று கூறி கொண்டு விவசாயிகளை ஏமாற்றி கொண்டிருக்கும் விஷவாயுதான் எடப்பாடி பழனிசாமி என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியுமா என்று கேட்கிறார். எப்பொழுதும் நான் விவசாயி என்று கூறியதில்லை. ஆனால், விவசாயிகளுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு துணை நிற்கிறேன்.

விஷவாயு எடப்பாடி பழனிசாமி

குடிமராமத்து திட்டத்தில் கொள்ளை, தூர்வார்வதிலும் ஊழல், விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு மேல் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக கூறிய மோடி, தற்போது வரை வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை. மக்கள் விரோத ஆட்சி செய்யும் மத்திய அரசை தட்டி கேட்க முடியாத நிலையில் அதிமுக ஆட்சி செயல்படுகிறது" என குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: திருப்பூரில் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை - காவல்துறையினர் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.