ETV Bharat / city

அதிமுக அரசை பாராட்ட பிரதமருக்கு என்ன நிர்பந்தம்? - மு.க. ஸ்டாலின் - ஸ்டாலின்

சென்னை: கரோனா தடுப்புச் சாதனங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழலை விசாரிக்க மத்திய உளவுத் துறை மூலம் ஒரு ரகசிய விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

modi
modi
author img

By

Published : Sep 24, 2020, 4:08 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதிலும், நோய்த்தொற்றுக்கு உள்ளாவோரை குறைப்பதிலும், தமிழ்நாடு அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்துவருவதாக, கரோனாவில் தோற்றுவிட்ட அதிமுக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பது ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அளிக்கவில்லை.

எப்போது கரோனா குறையும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என முதலமைச்சரே கைவிரித்துவிட்ட பிறகு, அவருடைய அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூற, பிரதமருக்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் வேதனை.

மாநிலத்தில் கரோனா நோய் தொடங்கியதிலிருந்து, அதன் பரவல் தீவிரமாகி, நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வேண்டுமானால், கரோனாவில் அதிமுக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுக்கிறது என்ற பாராட்டுப் பத்திரத்தை வழங்கியிருக்கும் பிரதமர் மோடி, தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உளவுத் துறை மூலம், ஒரு ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டு, அதிமுக அரசின் கரோனா படுதோல்விகளையும், கரோனா பாதுகாப்பு சாதனங்கள் கொள்முதல் ஊழல்களையும் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்“ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே!' - அவசர சட்டம் இயற்ற பாமக வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.