சென்னை: Hanuman Jayanthi: ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை நங்கநல்லூரில் பிரசித்திப் பெற்ற 32, அடி உயர ஆஞ்சநேயர் கோயிலில் மகா திருமஞ்சனத்துடன் இவ்விழா தொடங்கியது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அனுமன் ஜெயந்தி
அனுமன் ஜெயந்தியையொட்டி, ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
இதனையடுத்து சுமார் 3 கி.மீ. தூரம், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் முகக்கவசம் இல்லாமல் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. முகக்கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையர் பிராங் டி. ரூபன் தலைமையில் முகக்கவசம் வழங்கப்பட்டது.
மேலும் ஆலயத்தின் அருகில் தடுப்பூசி முகாமும் நடந்தது.
இதையும் படிங்க: 2021ஆம் ஆண்டில் 3,325 ரவுடிகள் கைது - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்