சென்னை: மாமல்லபுரம் பாரம்பரிய மிக்க கோயில்கள் மற்றும் சிறந்த கட்டடக்கலை ஆகிய சிறப்பம்சங்களை கொண்ட ஆன்மீக சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, தமிழ்நாட்டின் ஆன்மீகம், மற்றும் கலாச்சாரம் குறித்த தகவல்களை ஒரே இடத்தில் அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் 100 ஏக்கர் பரப்பில், இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான திட்ட அறிக்கை 1.50 கோடி செலவில் தயாரிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி அதற்கான ஒப்பந்தப் புள்ளியை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி சம்பவம்: மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணையை தடுக்கிறதா தமிழ்நாடு அரசு?