ETV Bharat / city

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியது மகிழ்ச்சி - கமல்ஹாசன் நெகிழ்ச்சி - கமல்ஹாசன் பிறந்தநாள் குடும்பம்

சென்னை: தன் பிறந்தநாளை உணர்வுப்பூர்வமாக தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் கழித்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Kamal
author img

By

Published : Nov 7, 2019, 10:46 PM IST

தனது பிறந்தநாளை சொந்த ஊரான பரமக்குடியில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தநாள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாகவும், மகிழ்ச்சியுடன் சென்றதாகவும் தெரிவித்தார்.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், ஆன்லைன் வர்த்தகம் விளம்பர விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிக்கியது எதிர்பாராதது எனவும், இனிவரும் காலங்களில் அது போன்ற தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.

கமல்ஹாசன் பேட்டி

நாட்டில் ஏற்பட்டுள்ள வேலையின்மை பிரச்னை, கடன் அதிகரிப்பு போன்ற சிக்கல்களை தீர்க்க நாம் தான் முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கருவறையில் உருவாகி ஆய்வறையில் வளர்ந்த ஆண்டவர்!

Intro:மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

இன்றைய நாள் உணர்ச்சி பூர்வமாகவும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தந்தையின் பெயர் சொல்லி ஒரே மேடையில் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது எனவும் மக்கள் நீதி மையத்தையும் சேர்த்து என் குடும்பத்தின் அளவு மிக மிகப் பெரியது எனவும் தெரிவித்தார்

நடிகர் சங்கத்திற்கான தனி அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளன எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு

அது அந்த மாதிரி தீர்க்கக்கூடிய சிக்கல் அல்ல மிகவும் சின்ன கூட்டம் அதை உட்கார்ந்து பேசினால் நல்ல முடிவு எடுக்கப்படும் என்பது எனது கருத்து என தெரிவித்தார் அதில் நான் தலையிட முடியாது இளைஞர்களும் மற்றவர்களும் ஒன்றாக சேர்ந்து வெற்றி பெற வேண்டும்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் அவர்களுக்கு தமிழக அரசு பரோல் வழங்கியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு

சட்டம் வேறு உணர்வுகள் வேறு சட்டம் அதன் கடமையைச் செய்யும் நம் உணர்வுகளை நாம் வெளிப்படுத்துவோம் எனக் கூறினார்

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்காக நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்

நடிகர் விஜய் சேதுபதி ஆன்லைன் வர்த்தகம் விளம்பரத்தில் நடித்ததற்காக எழுந்த எதிப்பு குறித்து

தானும் கடந்த காலங்களில் இதுபோன்ற தவறுகளை செய்து உள்ளேன் இனிவரும் காலங்களில் அது போன்ற தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும் என கூறினார்

நாம் வாங்கிய சுதந்திரத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் அதற்காகப் போராடிதான் தீர வேண்டும். நாட்டில் ஏற்ப்பட்டுள்ள வேலைவாய்ப்பு,கடன்அதிகரிப்பை யாரோ ஒருவர் தீர்ப்பார் என்று அவரை சுட்டிக்காட்டி விலகி விடக்கூடாது நாம் எல்லோரும் சேர்ந்து அதற்கான தீர்வை காணவேண்டும் அதற்காக விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் அதற்கும் தனி மனிதர்களுக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.