ETV Bharat / city

நீட் தேர்விற்கு குறுகிய காலம் இருப்பதால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி! - நீட் தேர்விற்கு குறுகிய காலம் இருப்பதால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

நீட் தேர்விற்கு குறுகிய காலம் இருப்பதால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப்பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
author img

By

Published : Mar 31, 2022, 3:28 PM IST

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ள நடமாடும் மருத்துவ வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 2 மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாயினை வழங்கினார்.

நடமாடும் மருத்துவக் குழு: அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், கிராமங்களில் இல்லம் தேடி சிகிச்சை என்ற முறையில் நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளது. 387 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று சிகிச்சையளிக்கப்பட உள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

முதற்கட்டமாக 100 நடமாடும் மருத்துவ வாகனத்தை அடுத்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். கிராமங்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின்கீழ், 70 கோடி ரூபாய் மதிப்பில் 389 நடமாடும் புதிய மருத்துவ வாகனங்கள் கிராமங்களுக்குச் செல்ல உள்ளன.

மருத்துவ முகாம்: ஒவ்வொரு வாகனத்திலும் 1 மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் கிராமங்களுக்குச் சென்று மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கரோனாவினால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களில் 168 பேருக்கு 74.25 கோடி ரூபாய் தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முன்களப்பணியாளராகப் பணியாற்றி கரோனாவால் உயிரிழந்த 2 மருத்துவப்பணியாளர்கள் குடும்பத்திற்கு இன்று தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது. கரோனா தொற்று தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மக்கள் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். சீனா, மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கரோனா தடுப்பூசி: அதனைத்தொடர்ந்து 27ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் வரும் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்படும். எனவே, முதல் தவணைத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ள 50 லட்சம் நபர்களும், அதேபோல் இரண்டாம் தவணைத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும்.

மருத்துவத் தேவைகளுக்காக மத்திய அரசுக்கு கடிதம், சந்திப்பு என பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதனைத்தொடர்ந்து நாளை டெல்லியில் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டாவியாவை சந்திக்கிறோம். அப்போது, பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க அனுமதி கேட்கிறோம்.

மருத்துவக்கல்வி: உக்ரைனில் மருத்துவம் படித்து விட்டு வந்த மாணவர்கள், தாங்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வி பயில்வதற்கோ அல்லது உக்ரைனில் உள்ள பாடப்பிரிவு பின்பற்றப்படுகின்ற போலந்து போன்ற நாட்டிற்குச் சென்று மருத்துவக்கல்வி பயில்வதற்கோ அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்க உள்ளோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தற்பொழுது சுற்றுச்சுவர் மட்டுமே உள்ளது.

எனவே, நடப்பாண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர வேண்டிய மாணவர்களில் 50 பேரை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் சேர்த்துள்ளோம். எனவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பயில்வதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக கோரிக்கையும், அதேபோல் கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி அமைக்கவும், நீரிழிவு நோய்களுக்கான புதிய பட்டப்படிப்பு துறையை அமைக்கவும் அனுமதி கேட்கிறோம்.

சிறப்புப் பயிற்சி: மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அமைச்சரிடம் தெரிவிக்க உள்ளோம். நீட் தேர்வில் விலக்கு பெற்றால் 100 விழுக்காடு வெற்றி இல்லையெனில், அரசுப் பள்ளியிவ் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறையுடன் கலந்துப்பேசி, சிறப்புப்பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்தாண்டு 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் தலா 150 இடங்களைப் பெறுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதில் 4 மருத்துவக்கல்லூரியில் தலா 100 இடங்கள் பெறப்பட்டன. அவற்றில் மீதமுள்ள தலா 50 இடங்களையும், மேலும் 2 மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக இடங்களைப் பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்களில் நிரப்பப்படாத காலி இடங்களை திருப்பி தந்தால் மாநில அரசு அந்த இடங்கள் குறித்து அறிவித்து, மாணவர்கள் சேர்க்கை நடத்தும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.