ETV Bharat / city

தென்னக ரயில்வேயின் சிறப்பு ரயில்கள்! - தென்னக ரயில்வேயின் சிறப்பு ரயில்கள்

தென்னக ரயில்வே நான்கு வழித் தடங்களுக்குச் சிறப்புத் தொடர்வண்டிகளை அறிவித்துள்ளது. கொச்சுவேலி முதல் நிலம்பூர், சென்னை முதல் ஹைதராபாத், சென்னை சென்ட்ரல் முதல் லோக்மானியா திலக், திருநெல்வேலி முதல் காந்திதம் ஆகிய நான்கு வழித் தடங்கள் இதில் அடங்கும்.

Special train approved by railways
Special train approved by railways
author img

By

Published : Dec 3, 2020, 6:16 AM IST

சென்னை: தென்னக ரயில்வே நான்கு வழித் தடங்களுக்குச் சிறப்புத் தொடர்வண்டிகளை அறிவித்துள்ளது.

அதில், வண்டி எண் 06349 கொச்சுவேலி - நிலம்பூர் சாலை சிறப்புத் தொடர்வண்டி கொச்சுவேலியிலிருந்து 20.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 05.45 மணிக்கு நிலம்பூர் சாலையை அடைகிறது. மீண்டும், வண்டி எண் 06350 நிலம்பூர் சாலை - கொச்சுவேலி சிறப்புத் தொடர்வண்டி 21.30 மணிக்கு நிலம்பூர் சாலையிலிருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 05.50 மணிக்கு கொச்சுவேலியை வந்தடையும். நிலம்பூர் சாலையிலிருந்து முதல் சேவை 2020 டிசம்பர் 09 அன்று தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 02603 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத் டெய்லி சிறப்பு விரைவு தொடர்வண்டி சென்ட்ரலிலிருந்து டிசம்பர் 10 அன்று 16.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 05.40 மணிக்கு ஹைதராபாத்தை அடைகிறது. திரும்பும் திசையில், வண்டி எண் 02604 ஹைதராபாத் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் விரைவு சிறப்பு ரயில் 16.45 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை 05.45 மணிக்கு அடையும் என்று கூறப்பட்டுள்ளது.

வண்டி எண் 02163 லோக்மான்யா திலக் - எம்ஜிஆர் சென்னை மத்திய திருவிழா சிறப்புத் தொடர்வண்டி லோக்மான்யா திலக்கிலிருந்து 18.45 மணிக்குப் புறப்படும். திரும்பும் திசையில், வண்டி எண் 02164 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - லோக்மான்யா திலக் திருவிழா சிறப்புத் தொடர்வண்டி எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலிலிருந்து 18.25 மணிக்குப் புறப்படும். மொத்தமாக இருவழித் தடத்திலிருந்து தலா 31 சேவைகள் அளிக்கப்படும் எனத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

வண்டி எண் 09424 காந்திதம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்புத் தொடர்வண்டி சேவை 2020 டிசம்பர் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே சிறப்பு ரயிலில் காந்திதத்திலிருந்து நான்கு கூடுதல் சேவைகள் திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

­

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.