ETV Bharat / city

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிப்பது யார்? - நாளை தீர்ப்பு!

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

case
case
author img

By

Published : May 26, 2020, 7:07 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களும் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தனர். மேலும், வருமான வரி பாக்கி 40 கோடி ரூபாய் இருப்பதால் ஜெயலலிதாவின் வேதா இல்லம் உட்பட சில சொத்துகள், வருமானவரித்துறையால் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை நாளை நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் நாளை வழங்க உள்ளனர்.

ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ஏதுவாக இடம் உள்ளிட்ட சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான அவசர சட்டத்தை கடந்த வாரம் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குடிபெயர் தொழிலாளர் விவரங்களை அரசிடம் அளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.