12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னையில் திருத்தும் மையம் அமைக்கப்படவில்லை. இதனால், இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் வசதிக்காக, சென்னையின் புறநகர் பகுதிகளான கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம், செங்குன்றம், சூரப்பட்டு, போலிவாக்கம் ஆகிய இடங்களுக்கு ஆசிரியர்கள் சென்று வர மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 45 கட்டண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடையும் வரையில் இப்பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்காக மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்கனவே 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா: ரயில்வே தென் மண்டல மேலாளர் அலுவலகம் மூடல்