இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் டிச.26 இரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.
அதில் வந்த சென்னையை சோ்ந்த ஒரு பெண் பயணி ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த மூன்று தங்க செயின்களை கைப்பற்றினர். அதேபோல் சாா்ஜாவிலிருந்து கல்ஃப் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சென்னையை சோ்ந்த 2 ஆண் பயணிகளை சோதனையிட்டனர்.
அவா்கள் வைத்திருந்த லேப்டாப் சாா்ஜர் மற்றும் ஆடைகளில் 10 தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனர். இலங்கையிலிருந்து வந்த பெண் பயணி மற்றும் சார்ஜாவிலிருந்து வந்த இரு ஆண் பயணிகள் ஆகியோரிடமிருந்து 950 கிராம் தங்க செயின்கள்,தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். அவைகளின் மதிப்பு ரூ.42.3 லட்சம். இதையடுத்து மூன்று பயணிகளையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனர். இதையடுத்து அந்த விமானம் உள்நாட்டு விமானமாக டில்லி செல்ல தயாரானது.
விமான லோடர்கள் விமானத்திற்குள் ஏறி சுத்தப்படுத்தினர். அப்போது விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் கருப்பு பாலிதீன் பையில் சுத்தப்பட்ட ஒரு சிறிய பார்சல் இருந்ததை கண்டுப்பிடித்து விமானநிலைய மேலாளரிடம் தெரிவித்தனர்.
உடனே பாதுகாப்பு அதிகாரிகள் வந்து பாா்சலை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அதனுள் நான்கு தங்கக்கட்டிகள் இருந்தன. அதன் எடை 450 கிராம், மதிப்பு ரூ.20 லட்சம். இதையடுத்து விமானநிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை விமானநிலையத்தில் துபாய், சாா்ஜா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து அடுத்தடுத்து வந்த மூன்று விமானங்களில் ரூ.62.3 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல் பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Eggs - சத்துணவு மையத்தில் கெட்டுப்போன முட்டை: அரசு தரும் விளக்கம் என்ன ?