ETV Bharat / city

சேலம் - அசாம் இடையே சிறப்பு பார்சல் ரயில்! - சிறப்பு பார்சல் ரயில்

சென்னை: சேலத்திலிருந்து அசாம் மாநிலம் திமாபூருக்கும், அங்கிருந்து மீண்டும் சேலத்துக்கும் சிறப்பு பார்சல் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

railway
railway
author img

By

Published : Apr 29, 2020, 3:05 PM IST

கரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், முக்கியப் பகுதிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு சரக்கு ரயில் சேவையை இயக்கி வருகிறது.

அந்த வகையில், சிறப்பு பார்சல் ரயில் (வண்டி எண்: 00661), நாளை (30.04.2020) காலை 8 மணிக்கு சேலம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா, நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், துர்காபூர், மால்டா டவுன், கௌஹாத்தி வழியாக மே மூன்றாம் தேதி காலை 6:30 மணிக்கு அசாம் மாநிலம் திமாப்பூர் சென்றடையும்.

அதேபோல், திமாபூர் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு பார்சல் ரயில் (வண்டி எண்: 00662) மே 4 ஆம் தேதி காலை 5 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு 7 ஆம் தேதி வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காற்றில் பறக்கவிடப்பட்ட தகுந்த இடைவெளி: சேலம் சந்தையில் மக்கள் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.