கரேனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள், பள்ளிகள், திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. மேலும், வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மக்களின் தேவை கருதி கடந்த சில நாட்களாக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, சின்னத்திரை படப்பிடிப்புகளை 60 பேரை வைத்து நடத்திக் கொள்ளவும், பின் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்தில், தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார் மற்றும் செயலாளர் குஷ்பு ஆகியோர் இன்று சந்தித்தனர்.
அப்போது, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து, 60 பேர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கியதற்காக முதலமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.
இதையும் படிங்க: "காற்றிலே கலந்த அனுபவம்... OTT-யில் காத்திருங்கள்" - இளையராஜா