ETV Bharat / city

மாமியார் மன்னித்ததால் மருமகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்து! - மருமகனை மன்னித்துவிட்டதாக மாமியார் கூறியதால் மருமகன் விடுதலை

மாமியாரை வெட்டிய மருமகனுக்கு விதிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமியாரும் மருமகனும் சமாதானம் ஆகிவிட்டதால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

MHC
MHC
author img

By

Published : Jul 21, 2022, 11:02 PM IST

சென்னை: சேலம் ஆத்தூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவருக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு, சிவசுப்பிரமணி வாங்கிய கடனை திரும்பச்செலுத்துவது தொடர்பாக வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சிவசுப்பிரமணி வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தனது மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார்.

இதுகுறித்து மாமியார் கொடுத்தப் புகாரின் அடிப்படையில், சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம் சுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பரதச் சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவசுப்பிரமணியும் அவரது மாமியாரும் சமாதானமாகிவிட்டதாகவும், அதனால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என மாமியார் தெரிவிப்பதாகவும் சிவசுப்பிரமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான மாமியார், தனது மகள் மருமகனுடன் வாழ வேண்டும், குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றும், தங்களுக்குள் சமாதானம் ஆகி மருமகனை மன்னித்துவிட்டதால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், "கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதில் உயர் நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று ஜோஷி என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் உயர் நீதிமன்றம் குடும்பப் பிரச்னையில் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். இந்த வழக்கில் கொலை முயற்சி மற்றும் கொடுங்காயம் விளைவித்தல் பிரிவில் மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் குற்றம் நடந்துள்ளது. கணவருக்கும் மனைவிக்கும் இடையே இருந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, உயர் நீதிமன்றத்திற்கு தரப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மனுதாரரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கணவர் இறப்பு குறித்து வழக்குத்தொடர்ந்த மனைவி - ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.