ETV Bharat / city

’ஊரடங்கு நேரத்தில் 69 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன’ - தமிழ்நாடு காவல்துறை - Tamil News

தமிழ்நாடு முழுவதும் கடந்த 60 நாள்களில் முகக்கவசம் அணியாமல் சென்றதற்கு 13 லட்சம் வழக்குகளும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் சென்றதற்கு 69 ஆயிரம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை
author img

By

Published : Jun 8, 2021, 5:32 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது அமலில் இருந்து வருகிறது. அத்தியாவசியத் தேவைகள் தவிர வெளியே வருவோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களில் செல்வோர் முறையாக முகக்கவசம் அணிந்து செல்கின்றனரா, அரசு அனுமதித்த பயணிகளைத் தவிர கூடுதலாக ஏற்றிச் செல்கின்றனரா என்பன குறித்து காவல் துறையினர் கவனித்து வருகின்றனர். அரசு உத்தரவை மீறி முகக்கவசம், தகுந்த இடைவெளியை பின்பற்றாத நபர்கள் மீது, காவல் துறையினர் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து அபராதத் தொகையை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி முதல் நேற்று (ஜூன் 7) வரை முகக்கவசம் அணியாமல் சென்றதாக 13 லட்சத்து 14 ஆயிரத்து 563 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு மண்டலத்தில் இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 475 வழக்குகளும், மத்திய மண்டலத்தில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 432 வழக்குகளும், மேற்கு மண்டலத்தில் இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 539 வழக்குகளும், தென் மண்டலத்தில் நான்கு லட்சத்து 24 ஆயிரத்து 547 வழக்குகளும், நகர் பகுதிகளில் இரண்டு லட்சத்து 74 ஆயிரத்து 547 வழக்குகளும் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் சென்றதற்காக, தமிழ்நாடு முழுவதும் 69 ஆயிரத்து 88 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக வடக்கு மண்டலத்தில் 14 ஆயிரத்து 288 வழக்குகள், மத்திய மண்டலத்தில் 9,319 வழக்குகள், மேற்கு மண்டலத்தில் 10,014 வழக்குகள், தென்மண்டலத்தில் 17,163 வழக்குகள், நகர் பகுதிகளில் 18,304 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.