சென்னை: நெற்குன்றம் புவனேஷ்வரி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (58). இவர் வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார்.
வழக்கம்போல் நேற்று (ஆகஸ்ட் 9) பணிக்கு வந்த கோபாலகிருஷ்ணன் காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள நான்காவது கேட்டில் மாலை 7 மணியளவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
காவலர் உயிரிழப்பு
இதனைக் கண்ட பாதுகாப்புப் பிரிவு காவலர்கள் உடனடியாக கோபாலகிருஷ்ணனை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சிறப்பு உதவி ஆய்வாளர் இறந்தது தொடர்பாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 1986 பேட்ச் காவலரான கோபாலகிருஷ்ணன் பல காவல் நிலையங்களில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தடைகளைத் தகர்த்து காவலர் உடல்தகுதித் தேர்வில் திருநங்கை தேர்ச்சி