தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பொது இடங்களில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இக்கட்டுப்பாடுகளை சில வணிக நிறுவனங்கள், கடைகள் முறையாகப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில், பெசன்ட் நகரில் உள்ள ஆடைகள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில், அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படாமல், ஏராளமான வாடிக்கையாளர்களைக் கடைக்குள் அனுமதித்த தகவல் மாநகராட்சி அலுவலர்களுக்கு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அலுவலர்கள் அக்கடைக்குள் சென்று பார்த்தபோது, ஏராளமான வாடிக்கையாளர்கள் துளிகூட தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், சிலர் முகக்கவசமின்றியும் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றிய அலுவலர்கள், கடைக்குச் சீல்வைத்தனர்.
இதையும் படிங்க: பெண்ணின் வீடு எரிப்பு உள்பட 22 வழக்குகள்: பிரபல ரவுடி கைது!