சென்னை: தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், மாநிலத்தில் ஏழு ஐஏஎஸ் அலுவலர்கள் முதன்மைச் செயலாளர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இவர்களில் சத்திய பிரதா சாகு மற்றும் கரோனா காலத்தில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்து பின்னர் வணிக வரித் துறைக்கு மாற்றப்பட்ட பீலா ராஜேஷ் ஆகியோரும் அடங்குவர். சத்திய பிரதா சாகு, மாநிலத் தேர்தல் அலுவலராகப் பணிபுரிந்துவருகிறார்.
இது குறித்து முதன்மைச் செயலர் கே. சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வ.எண் | பெயர் | முதன்மை செயலர் பதவி & துறைகள் |
01 | கார்த்திகேயன் | வீடு, நகர்புற மேம்பாடு |
02 | ஸ்வர்ணா | தனிநபர், நிர்வாக சீர்திருத்தம் |
03 | ஆஷிஷ் வச்சானி | டெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மை ஆணையர் |
04 | பங்கஜ் குமார் பன்சால் | தமிழ்நாடு மின்சார வாரியம் |
05 | சத்ய பிரதா சாகு | தமிழ்நாடு தேர்தல் அலுவலர் |
06 | ஹர் சாகேய் மீனா | தனிநபர், நிர்வாக சீர்திருத்தம் |
07 | பீலா ராஜேஷ் | வணிக வரி மற்றும் பதிவு |