ETV Bharat / city

80 காவல் நிலையங்களில் வழக்கு: கவ் பார் கொள்ளையன் கைது

தமிழ்நாடு முழுவதும் உள்ள 80 காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகளுடைய கவ் பார் கொள்ளையனை சென்னை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி
author img

By

Published : Oct 1, 2021, 9:43 PM IST

சென்னை: கொளத்தூர் அண்ணா சிலை அருகே கடந்த மாதம் 2ஆம் தேதி இனிப்பகம் விற்பனைக் கடையின் பூட்டை உடைத்து 22 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கொளத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கடையிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வுசெய்த காவல் துறையினர், திருடன் சென்ற வழித்தடங்களில் அமைந்துள்ள சுமார் 60 கண்காணிப்புக் கேமராக்களையும் ஆய்வுசெய்தனர்.

5 முறை பாய்ந்த குண்டர் சட்டம்

இந்நிலையில் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சிவகங்கையில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவரைக் கைதுசெய்து சென்னை கொண்டுவந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் காளிதாஸ் (54) என்பது தெரியவந்தது. மேலும், இவர் மீது ஏற்கனவே சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 80 காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்ட கொள்ளையன் காளிதாஸ் இதுவரை தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். ஐந்து முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 2020ஆம் ஆண்டுதான் சிறையிலிருந்து வெளியே வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சத்தமின்றி திருடும் கலை - கொள்ளையன் வாக்குமூலம்

கடந்த ஜனவரி மாதம் அமைந்தகரையிலுள்ள தனியார் இனிப்பகம், மார்ச் மாதம் வேப்பேரியிலுள்ள மின்சாதன கடை, ராஜமங்கலத்திலுள்ள இனிப்பகம் ஆகிய கடைகளில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை திருடியது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இவர் கவ் பார் எனப்படும் இரும்பு ராடு கம்பியில் துணியைச் சுற்றி சத்தம் கேட்காத வண்ணம் நாசுக்காகத் திருடுவதில் கைத்தேர்ந்தவராம். அதுவும் வாகனங்கள் செல்லும்போது கடையின் அருகில், கவ் பாரை வைத்து பூட்டை உடைக்க காத்திருப்பார்.

கனரக வாகனங்கள் கடை வழியாகச் செல்லும்போது அந்தச் சத்தத்தில், பூட்டை சத்தமே இல்லாமல் உடைப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அருகிலுள்ள காவலாளிக்குக்கூட சத்தம் கேட்காத வகையில் பூட்டை உடைத்துத் திருடுவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிக விலை: இரவே அக்கடையில் கைவரிசை

குறிப்பாக காலை நேரங்களில் கடைக்குப் பொருள்கள் வாங்குவதுபோல் வந்து பேக்கரி, பாத்திரக்கடை உள்ளிட்ட கடைகளில் வேவு பார்த்தப் பிறகு அன்று இரவே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவதாக காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிக விலைக்கு உணவுப்பொருள்களை விற்கும் கடைகளைக் குறிவைத்து அந்தக் கடைகளில் திருடிவந்ததாகவும் கூறியுள்ளார். பெரும்பாலும் உணவகங்கள், ஜூஸ் பார்கள், பெரிய தேநீர்க் கடைகள் ஆகியவற்றைக் குறிவைத்துத் திருடிவந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் பெரம்பூர் சீனிவாசா என்ற பிரபல இனிப்பகத்தில் ஜூஸ் சாப்பிட நண்பரோடு சென்றபோது, 150 ரூபாய்க்கு பாதாம்கீர் விற்பனை செய்ததால், அதிக விலை வாங்கிய அந்தக் கடைக்குள் அன்று இரவே சென்று திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருட்டிலும் கோடுபோட்டு வாழும் கொள்ளையன்

குறிப்பாக குடித்த பாதாம் கீருக்கு 500 ரூபாய் நோட்டை கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை கல்லாப் பெட்டியில் கடைக்காரர் எந்தெந்த இடத்தில் எந்தெந்த நோட்டுகள் வைக்கிறார் என்பதை நோட்டமிட்டு கொள்ளையடித்ததாகவும் வாக்குமூலத்தில் காளிதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றே நிமிடத்தில் சத்தமில்லாமல் ஷட்டரின் பூட்டை உடைத்து, பணத்தைத் திருடிவிட்டுச் செல்லும் வேகமான கொள்ளையன் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் பணம் புழங்கும் கடைகளை மட்டுமே குறிவைத்து திருட்டில் ஈடுபடுகிறார் காளிதாஸ்.

திருடிய பணத்தை பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், துணை நடிகைகளுக்கு வாரி வழங்கி காளிதாஸ் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவந்தது விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளையடித்து பணத்தில் பெண்ணுக்குத் திருமணம்

ஒரு திருட்டுக்குப் பிறகு இரண்டு நாள்கள் கழித்துதான் மீண்டும் மற்றொரு திருட்டை அரங்கேற்றுவதாகவும், காவல் துறையினர் நோட்டம் வடுவது அதிகமானால், ஊரை மாற்றி வேறு ஊருக்குச் சென்று திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கொள்ளையடித்தப் பணத்தை வைத்துப் பெண்ணிற்குக் கல்யாணம் செய்துள்ளதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சி

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட காளிதாஸை, கொளத்தூர் காவல் துறையினர், எவ்வாறு திருட்டுச் சம்பங்களில் ஈடுபடுவார் என்பதை செய்துகாட்ட வைத்து காணொலியும் எடுத்துவைத்துள்ளனர். விசாரணை முடிந்த பிறகு தற்போது கவ் பார் கொள்ளையன் காளிதாசை காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசியல்வாதிகளை ஏமாற்றிய பலே கில்லாடி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.