சென்னை: சின்னத்திரை நடிகர் அர்ணவ் அவரது காதல் மனைவி கர்ப்பினியான சின்னத்திரை நடிகை திவ்யாவை அடித்து துன்புறுத்தியாக அவர் அளித்த புகாரில், போருர் அனைத்து மகளிர் போலீசார் அர்ணவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தப் புகார் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை போலீசார் தெரிவித்தும் அர்ணவ் விசாரணைக்கு ஆஜராகாததால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அமைப்பி இருந்தனர்.
போலீசார் அனுப்பிய சம்மனை அர்ணவ் பெற்று கொண்டதாகவும், குறிப்பாக பதிவு தபால் மற்றும் செல்போனிலும் அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனை அவர் பெற்று கொண்ட நிலையில் இன்று காலை விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் மாங்காட்டில் உள்ள போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டரிடம் அர்ணவிற்கு கண்ணில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதன் காரணமாக அவர் விசாரணைக்கு ஆஜராவதில் கால அவகாசம் வேண்டும் எனவும் வரும் 18ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என விளக்க கடிதம் கொடுத்தனர்.
அதனை போலீசார் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் வக்கீல்கள் அங்கிருந்து கிளம்பினர். அர்ணவ் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்கும் நாட்களுக்கு இடையில் அவர் முன் ஜாமீன் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், அர்ணவ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான சான்றுகள் ஏதும் தராததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.
இதையடுத்து அவர் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்து போரூர் தனிப்படை போலீசார் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் இருந்த அர்ணவை அதிரடியாக கைது செய்தனர். போலீசார் வருவதை சற்றும் எதிர்பாராமல் இருந்த அர்ணவ் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதையடுத்து அர்ணவை மாங்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரித்து வந்தனர். விசாரணைக்கு ஆஜராகாமல் நாடகமாடி விட்டு படப்பிடிப்பில் இருந்த சின்னத்திரை நடிகர் அர்ணவை படப்பிடிப்பு தளத்தில் வைத்தே போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட அர்ணவை பூந்தமல்லியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டு பின்னர் அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பரம்வீர் முன்னர் ஆஜர் படுத்தினர். நடிகர் அர்ணவிற்கு வரும் 28ஆம் தேதி வரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து சிறைக்கு அழைத்து செல்லும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ணவ், ”நான் எந்த தவறும் செய்யவில்லை. உண்மை ஒருநாள் நிரூபிக்கப்படும். என்னை பழி வாங்க வேண்டும் என நினைத்தாய் திவ்யா அதை செய்துவிடாய் இப்பொழுது சந்தோஷமா” என கூறி கட்டைவிரலை உயர்த்தி காட்டி சென்றார் (THUMPS'UP ).
முன்னதாக அர்ணவ் செய்தியாளர்களை சந்திக்க முயற்சித்தபோது அங்கிருந்த பெண் காவல் அதிகாரி பேட்டி அளிக்கவிடாமல் உள்ளே நுழைந்து அவரை வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றி சிறைக்கு அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: நயன்தாரா மீது காவல் நிலையத்தில் புகார்