ETV Bharat / city

சமூக வலைதளங்களுக்கு தணிக்கை வாரியம் அமைக்கக் கோரி மனு - சமூக வலைதளங்கள்

சென்னை: யூ டியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் காட்சிப்பதிவுகளை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

highcourt
highcourt
author img

By

Published : Jul 29, 2020, 5:53 PM IST

அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் மக்களின் நம்பிக்கை சார்ந்த விவகாரம், பிரபலங்களின் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசுப் பொருளாகவும், சர்ச்சையாகவும் மாறி வருகிறது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் காட்சிப்பதிவுகளை தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருவதாலும், பல்வேறு தரப்பினரும் தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும், இணையப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய காட்சிகள் பதிவிடப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

குறும்படம் என்ற பெயரில் ஆபாசமான காட்சிகள் அதிகம் பதிவிடப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியாவில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் போதிலும், அதற்கென எந்தவித தணிக்கை முறையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திரைப்படங்களை தணிக்கை செய்ய சென்சார் போர்டு உள்ளதைப் போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும், தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு வாரியம் அமைக்கும் வரை, சமூக வலைதளங்களில் காட்சிகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மாரிதாஸுக்கு வாய்ப்பூட்டு போட்ட உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.