ETV Bharat / city

அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர். சண்முகசுந்தரம் நியமனம்! - அரசின் தலைமை வழக்கறிஞர்

மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Senior advocate shanmugasundharam appointed as AG in MHC

author img

By

Published : May 9, 2021, 9:49 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர். சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் இருந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் தற்போதைய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர். சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், 1953ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தவர். இவரது தந்தை எஸ். ராஜகோபால், மதுரை மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்தவர்.

சண்முகசுந்தரம் சட்டப்படிப்பை முடித்துவிட்டு 1977ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து, மூத்த வழக்கறிஞர் என். நடராஜன், தன் தந்தை எஸ்.ராஜகோபால் ஆகியோரிடம் ஜூனியர் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இவர் ஏராளமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் திறம்பட வாதம் செய்துள்ளார். சட்டத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். 1989 முதல் 1991 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும், 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவி வகித்தவர்.

2000ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். பின்னர், 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2015 - 2017 காலகட்டத்தில் மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவராகவும் இருந்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்களுக்கு எதிராக சொத்து குவிப்பு, ஊழல், குற்ற வழக்குகள் ஆகியவற்றை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.