ETV Bharat / city

தாமரைக்கேணி ஏரியில் உருவான காவல் நிலையம் - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு - semmancheri police station

சென்னை: சோழிங்கநல்லூர், தாமரைக்கேணி ஏரியில் செம்மஞ்சேரி புறநகர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, பொதுப்பணித்துறை, சி.எம்.டி.ஏ. அலுவலர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai
author img

By

Published : Nov 22, 2019, 1:20 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் பகுதியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்த, தாமரைக்கேணி ஏரியில் ஒரு பகுதியை நீர் நிலைகள் பட்டியலில் இருந்து மாற்றி, நிறுவனப் பயன்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில், செம்மஞ்சேரி புறநகர் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு, தாமரைக்கேணி ஏரியை கட்டுமானங்களை மேற்கொள்ளும் நிலமாக மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், நில நிர்வாக ஆணையரின் பரிந்துரையின் அடிப்படையில் நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் காவல் நிலைய கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், காவல் நிலைய கட்டுமானங்கள் நிறைவடைந்து, திறப்பு விழாவிற்காக காத்திருப்பதாகவும், அது திறக்கப்பட்டபின் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் செயல்படப்போவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏரியில் காவல் நிலையம் கட்ட அரசு ஒதுக்கிய நிலத்தை, தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் முன்னிலையில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை திட்டமிடல் அலுவலரும் நேரில் ஆய்வு செய்து, புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:

மேற்குத் தொடர்ச்சி வனப் பகுதிகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!

Intro:Body:சோழிங்கநல்லூர், தாமரைக்கேணி ஏரியில் செம்மஞ்சேரி புறநகர்காவல் நிலையம் அமைக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, பொதுப்பணித்துறை, சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் பகுதியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்த, தாமரைக்கேணி ஏரியில் ஒரு பகுதியை, நீர்நிலைகள் பட்டியலில் இருந்து மாற்றி, நிறுவன பயன்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில், செம்மஞ்சேரி புறநகர் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, தாமரைக்கேணி ஏரியை கட்டுமானங்களை மேற்கொள்ளும் நிலமாக மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், நில நிர்வாக ஆணையரின் பரிந்துரையின் அடிப்படையில் நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் காவல் நிலைய கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், காவல் நிலைய கட்டுமானங்கள் நிறைவடைந்து, திறப்புவிழாவிற்காக காத்திருப்பதாகவும், அது திறக்கப்பட்டபின் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்துவதில் செயல்படப்போவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏரியில் காவல் நிலையம் கட்ட அரசு ஒதுக்கிய நிலத்தை, தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் முன்னிலையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை திட்டமிடல் அதிகாரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 5 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.