சென்னை:சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கிழக்கு தாம்பரம் பாரதமாதா சாலையில் சிற்றுண்டி கடை நடத்தி வரும் திருமுடிவாக்கத்தை சேர்ந்த காத்தவராயன் (36) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து அங்கு சோதனை செய்ய முயன்ற போலீசாரிடம் காத்தவராயன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தொடர்ந்து சோதனை நடத்தியதில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் செங்கல்பட்டிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:ஆண் என நினைத்து பெண் காவலரிடம் வம்பு செய்து உதை வாங்கிய போதை ஆசாமிகள்!