இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த மதிமாறன் இயக்கியுள்ள படம் "செல்ஃபி". இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடித்ததோடு, படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர், இன்று காலை சென்னை ரோகிணி திரையரங்கில், ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர். மேலும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கல்லூரிகளில் நடக்கும் கல்விக்கட்டண கொள்ளை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும், படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க : ஆர்ஆர்ஆர் தொடர்பான பதிவை நீக்கியது ஏன் - அலியா பட் விளக்கம்!