இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மண்டலவாரியாக கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
அந்தவகையில், தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, சேலம், விழுப்புரம், கோயம்புத்தூர் மண்டலக் கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதியன்று வேலூரில், ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு நடைபெற்றது.
அதேபோல், இன்று பிற்பகலில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள என்.பி.சி.திருமண மண்டபத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இடஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸுக்கு ஆதரவாக நிற்பேன்' - சீமான்