ETV Bharat / city

அடுத்த 10 ஆண்டுகளில் சீமைக்கருவேல மரங்கள் முழுவதும் அகற்றப்படும் - seemai karuvelam in tamilnadu

தமிழ்நாட்டில் சீமைக்கருவேல மரங்கள் படிப்படியாக அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக அகற்றப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

seemai-karuvelam-trees
seemai-karuvelam-trees
author img

By

Published : Apr 4, 2022, 6:46 PM IST

தமிழ்நாட்டில் சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரிய வழக்கில், தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சையது முசாமில் அப்பாஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் 196 வகையான அன்னிய மரங்கள் பரவியிருக்கின்றன. இதில் 23 வகையான மரங்கள் உடனடியாக கவனம் செலுத்தி அகற்றப்பட வேண்டியவை.

200 ஹெக்டேர் பரப்பளவில் பணிகள்: முதல்கட்டமாக 700 ஹெக்டேர் பரப்பளவில் மரங்களை அகற்றுவதற்காக 5 கோடியே 35 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்ய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. உரிய நிதி வழங்கப்படும் என்று நிதித்துறை செயலாளர் தெரிவித்தார். அதனடிப்படையில் ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், தர்மபுரி பகுதிகளில் உள்ள 200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மரங்களை அகற்றுவதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

போர்க்கால திட்டம்: இந்த வகையான மரங்கள் மேலும் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. சீமைக் கருவேல மரங்களை படிப்படியாக அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக அகற்ற கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த 5 ஆண்டுகளில் மரங்கள் மீண்டும் வளராமல் கண்காணிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சீமைக்கருவேல மரங்கள்... அரசுக்கு 2 மாதம் காலக்கெடு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.