ETV Bharat / city

மாணவர்கள் போராட தடைவிதிக்க வேண்டி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு - மாணவர்கள் போராட தடைவிதிக்க வேண்டி மனு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடைவிதிக்கக்கோரிய மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Seeking stay for collage students, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, Seeking stay for collage students protest, caa protest  மாணவர்கள் போராட தடைவிதிக்க வேண்டி மனு, அரசு பதிலளிக்க உத்தரவு
மாணவர்கள் போராட தடைவிதிக்க வேண்டி மனு
author img

By

Published : Feb 3, 2020, 2:29 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

கல்வி நிறுவன வளாகங்களிலோ, பொது இடங்களிலோ மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடைவிதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த செய்தியாளர் வாராகி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பருவத் தேர்வுகள் நெருங்கிவரும் நிலையில், மாணவர்கள் போராட்டத்தால் அவர்களின் படிப்பு மட்டுமல்லாமல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல் கட்சியினரால் மூளைச்சலவை செய்யப்பட்டு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், பல்கலைக்கழக விதிகளுக்கு முரணாகச் செயல்படும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

மேலும், இதுபோன்ற போராட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அலுவலர்கள், மவுனப் பார்வையாளர்களாக வேடிக்கை பார்ப்பதாகவும் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார். தங்கள் குறைகளை ஒன்றுகூடி தெரிவிக்க அரசியல் சாசனம் உரிமை தந்திருந்தாலும், அது பிற அப்பாவி மாணவர்களின் அடிப்படை உரிமையை பாதிக்கக் கூடாது எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, மார்ச் 2ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கும், தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர், சென்னை மாநகர ஆணையர், சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது.

Intro:Body:தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்வி நிறுவன வளாகங்களிலோ, பொது இடங்களிலோ மாணவர்கள் போராட்டங்கள் நடத்த தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிக்கையார் வாராகி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பருவத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள் போராட்டத்தால் அவர்களின் படிப்பு மட்டுமல்லாமல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர் என மனுவில் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சியினரால் மூளைச் சலவை செய்யப்பட்டு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், பல்கலை விதிகளுக்கு முரணாக செயல்படும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இதுபோன்ற போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள், மவுன பார்வையாளர்களாக வேடிக்கை பார்ப்பதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்கள் குறைகளை ஒன்று கூடி தெரிவிக்க அரசியல் சாசனம் உரிமை தந்திருந்தாலும், அது மற்ற அப்பாவி மாணவர்களின் அடிப்படை உரிமையை பாதிக்க கூடாது எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மார்ச் 2ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கும், தமிழக டிஜிபி, சென்னை மாநகர ஆணையர், சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.