ETV Bharat / city

அலறியடித்து ஓடிய ‘ஓட்டம்’ படக்குழு! - horror incident

காட்டுப்பகுதி படப்பிடிப்பில் நடந்த திகில் சம்பவத்தில் ‘ஓட்டம்’ படக்குழுவினர் அலறியடித்து ஓடியுள்ளனர்.

அலறியடித்து ஓடிய ‘ஓட்டம்’ படக்குழு!
அலறியடித்து ஓடிய ‘ஓட்டம்’ படக்குழு!
author img

By

Published : Apr 18, 2022, 10:20 PM IST

சென்னை: ரிக் கிரியேஷன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேமாவதி ரவிசங்கர் தயாரிக்கும் முதல் படம் ’ஓட்டம்’. மர்மங்களும் திகிலும் நிறைந்த இந்த படத்தில் இசையமைத்து கதாநாயகனாக அறிமுகமாகிறார், எஸ்.பிரதீப் வர்மா. இவருடன் ஐஸ்வர்யா சிந்தோஹி, அனுஸ்ரேயா கதாநாயகிகளாக அறிமுகமாக, வித்தியாசமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

இக்கதையில், காதலித்து கல்யாணம் செய்த மனைவி ஒரு பக்கம் இருக்க, தன்னைக் காப்பாற்றச்சொல்லி தஞ்சமடைந்த ஒரு பெண் மறுபக்கம் இருக்க, இருவரிடமும் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாநாயகனின் நிலையை நகைச்சுவையாகவும் திகிலாகவும் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.

நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பில் நிஜமாகவே ஒரு திகில் சம்பவம் நடந்து படக்குழுவினரை அலற வைத்துள்ளது. ஒரு நாள் இரவு காட்டுப்பகுதியில் கதாநாயகி ஐஸ்வர்யா சம்பந்தப்பட்ட திகில் காட்சி படமாக்கப்பட்ட போது, அவுட்டோர் யூனிட் விளக்குகள் ஒரு நிமிடம் அணைந்து அணைந்து எரிந்துள்ளது.

லைட்மேன்கள் நன்றாகப் பரிசோதனை செய்து பார்த்தும் விளக்குகள் அணைந்து அணைந்து எரிவது நிற்கவில்லை. இதனால், எதற்கும் அஞ்சாத அவுட்டோர் யூனிட் தொழிலாளர்களுக்கே சற்று பயம் ஏற்பட, கதாநாயகி ஐஸ்வர்யாவும் பயத்தில் உறைந்துபோய்விட்டாராம். பிறகு கற்பூரம் ஏற்றி பூஜை செய்ததும், சகஜ நிலைக்கு வந்ததாம். இந்தச் சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் எம்.முருகன். இவர் இயக்குநர் ராம.நாராயணனிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிந்து மாதவி நடிக்கும் பிரமாண்ட கிராபிக்ஸ் படம் "நாகா".

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.