ETV Bharat / city

மாணவர்கள் அன்னப்பறவை போல் மடிக்கணினியைப் பயன்படுத்த வேண்டும்- மாஃபா பாண்டியராஜன் - mla kashthuri

தமிழ்நாடு முழுவதும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கினர்.

மாபா பாண்டியராஜன்
author img

By

Published : Jul 23, 2019, 1:42 PM IST

தமிழ்நாடு அரசு சார்பில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019-20ஆம் ஆண்டிற்கான இலவச மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன. கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூரிலுள்ள ஒன்பது அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.

மற்றொரு நிகழ்வில் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை வட்டத்துக்கு உட்பட்ட ஆனைமலை நகரம், கோட்டூர், அங்குக்குறிச்சி, சோமந்துறை, சித்தூர், திவான்சாபுதூர், வேட்டைக்காரன் புதூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான 1,745 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வழங்கினார்.

அமைச்சர்கள்

திருவள்ளூரைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினியைத் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வழங்கினார். அப்போது அவர்,” மாணவர்கள் அன்னப் பறவை போல் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தீய விஷயங்களை ஒதுக்கித் தள்ள வேண்டும்.” எனப் பள்ளி மாணவ மாணவியருக்கு கூறினார்.

Intro:திருப்பூர் மாவட்டம் திருப்பூர் கல்வி மாவட்டத்தை உள்ளடக்கிய பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9 மேல்நிலைப்பள்ளிகளில் 2019 20 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 பிளஸ் 2 பயிலும் 4379 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக் கணினிகளை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று வழங்கினார்.

Body:தமிழக அரசு சார்பில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் நடந்து 2019ம் 20 ஆம் ஆண்டிற்கான இலவச மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று இலவச மடிக் கணினிகளை மாணவர்களுக்கு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா பல்லடம் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணபதிபாளையம் அருள்புரம் சாமி கவுண்டன்பாளையம் கரடிவாவி மங்கலம் இடுவம்பாளையம் வீரபாண்டி ஆகிய ஒன்பது அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 2084 மாணவ மாணவிகளுக்கும் பிளஸ் 2 பயிலும் இரண்டாயிரத்து 95 மாணவ மாணவிகளும் என மொத்தம் 4 ஆயிரத்து 179 மாணவ மாணவிகளுக்கு 4 கோடியே 34 லட்சத்து 61 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.