அம்பேத்கர் பல்கலைக்கழக துணை வேந்தராக முனைவர் என்.எஸ். சந்தோஷ் குமாரை பல்ககை்கழக துணை வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முனைவர் என்.எஸ். சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முனைவர் சந்தோஷ் குமார், 26 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாடு சட்ட கல்வியில் இயக்குனராக பணியாற்றினார். பல்வேறு சர்வதேச அளவிலான ஆய்வறிக்கைகளை சமர்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.