சேலம் மாவட்டம் இருப்பாளி கிராமத்திலுள்ள மேட்டுப்பட்டி ஏரி அருகில் நடைபெறவுள்ள அரசு விழாவில் ரூ.565 கோடி மதிப்பிலான மேட்டூர் அணையின் மழைக்கால வெள்ள உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள சரபங்கா வடிநிலப்பகுதியில் வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டத்தை அடிக்கல்நாட்டி தொடங்கிவைக்கவுள்ளார்.
இத்திட்டத்தினால் சரபங்கா வடிநிலப் பகுதியில் வறட்சியான நூறு ஏரிகள், குளங்கள் ஆகியவற்றிற்கு மேட்டூர் அணை உபரி நீர் மின்மோட்டார் மூலம் நீரேற்றம் (lifting irrigation) செய்யப்படும். இதனால் ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி நான்கு தாலுகாக்களில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.
வறட்சிக்குள்ளான பகுதிகளான நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், கெங்கவல்லி, எடப்பாடி ஆகிய ஒன்றியப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களும் பயன்பெறவுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம் அப்பகுதியினர் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதோடு அம்மக்களின் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படுவுள்ளது.
இதையும் படிங்க: ஈரானில் கொரோனா: தமிழ்நாடு மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!