ETV Bharat / city

ஒட்டன்சத்திரம் மக்களின் மனங்களை வென்ற எம்எல்ஏ சக்ரபாணி, தமிழ்நாட்டு மக்களின் மனங்களை வெல்வாரா?

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்ற சக்கரபாணி உணவுத்துறை அமைச்சராக முதல்முறையாக பதவி ஏற்கிறார்.

சக்கரபாணி.
சக்கரபாணி.
author img

By

Published : May 6, 2021, 4:46 PM IST

தமிழக தேர்தல் களத்தில் ஒரே தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதனை தக்க வைத்துக்கொள்வது என்பது எளிதான காரியமும் இல்லை. பல முறை வெற்றி பெற்ற ஸ்டார் வேட்பாளர்கள் கூட, தொகுதி மாறியே தங்கள் வெற்றியை தக்க வைத்துள்ளனர். தமிழகத்தில் எந்த அலை வீசினாலும் எம்எல்ஏக்கள் வெற்றி பட்டியலில் இவரின் பெயர் கண்டிப்பாக இருக்கும். ஆம்,,,, திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று சாதனை படைத்தவர் அர.சக்கரபாணி.

கடந்த 1961ஆம் ஆண்டு கலியப்பகவுன்டப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த சக்கரபாணி, பிஏ (பொருளாதாரம்) பட்டம் பெற்றவர். திண்டுக்கல் மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக இருந்த சக்கரபாணி, 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் களம் இறங்கினார். அதிமுகவுக்கு எதிரான அலை வீசிய அந்த தேர்தலில், சுமார் 36, 823 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றிக்கணக்கை தொடங்கினார் சக்கரபாணி.

இதனைத்தொடர்ந்து, 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான அலை வீசியபோதும் கூட, அதே ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டு 1,369 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சக்கரபாணி.

பின்னர் 2006 தேர்தலில் 19, 903 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், 2006 முதல் 2011 வரை அரசு கொறடாவாக பணியாற்றினார். 2011 தேர்தலில் 14933 வாக்கு வித்தியாசத்தில் அவர் மீண்டும் பெற்றி பெற்றார். இந்த தேர்தலில் திமுக எதிர்கட்சி அந்தஸ்தை இழந்த நிலையிலும், கரை சேர்ந்தார் சக்கரபாணி. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 65,727 வாக்குகள் வித்தியாசத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் மட்டுமல்ல 1998, 1999, 2004, 2009 உள்ளிட்ட மக்களவைத் தேர்தல்களிலும் திமுக கூட்டணி கட்சியாக இருந்த காங்கிரஸ், தமாகா வேட்பாளர்கள் ஒட்டன்சத்திரம் தொகுதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 6 வது முறையாக போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் சக்ரபாணி. சக்கரபாணி போல் எம்எல்ஏக்கள் இருந்தால் எப்போதும் திமுக ஆளும்கட்சிதான் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

இவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பது தொண்டர்கள் மட்டுமின்றி திமுக தலைமையின் விருப்பம் கூட. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில், முதல் முறையாக உணவு துறை அமைச்சராகிறார் சக்கரபாணி. ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று மக்களின் மனங்களை கவர்ந்தவர சக்கரபாணி, சுமார் 25 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்து மக்கள் பணிகளில் அனுபவம் பெற்றவர். தமிழ்நாட்டு மக்களின மனங்களிலும் இடம்பிடிப்பாரா அமைச்சராக...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.