ETV Bharat / city

தேர்வு முறைகேடு: ஜெயக்குமார், ஓம் காந்தனுக்கு 6 நாள்கள் சிபிசிஐடி காவல்

சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேட்டில் கைதுசெய்யப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தனை குரூப் 2ஏ, விஏஓ முறைகேடு தொடர்பாக ஆறு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என சிபிசிஐடிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

court
court
author img

By

Published : Feb 19, 2020, 5:13 PM IST

அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட மூன்று வழக்குகளில் இதுவரை 50 பேரை கைதுசெய்துள்ள சிபிசிஐடி, குரூப்-4 தேர்வில் முக்கிய இடைத்தரகராக இருந்த ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் ஆகிய இருவரும் குரூப் 2ஏ, விஏஓ ஆகிய தேர்வுகளிலும் பணம் வசூல்செய்து மோசடியில் ஈடுபட்டதையும் கண்டுபிடித்தது.

குரூப் 4 விவகாரத்தில் முதற்கட்டமாக இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம் காந்தனை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை முடித்திருந்த நிலையில், தற்போது குரூப் 2ஏ, விஏஓ தேர்வுகளில் செய்த முறைகேடு தொடர்பாகவும் விசாரிக்க முடிவுசெய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஜெயக்குமார், ஓம் காந்தன் ஆகிய இருவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் இன்று முன்னிலைப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயக்குமார், ஓம் காந்தனை ஆறு நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த விசாரணையில் பல முக்கிய நபர்களும் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திருடர்களிடம் தொடர்ந்து நகை வாங்கிவந்த அடகுக்கடை உரிமையாளர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.