துபாயிலிருந்து கிளம்பிய மீட்பு விமானம் நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமானப் பயணிகளிடம் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்தச் சோதனையில் மதுரை, இராமநாதபுரத்தைச் சோ்ந்த இரு மீட்பு பயணிகளிடம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 457 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், அவர்கள் இராமநாதபுரத்தை சோ்ந்த நைனாா் முகமது (38), மதுரையை சோ்ந்த அப்துல்காதா் ஜெய்லானி(34) என்பது தெரியவந்தது. தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தல் தங்கம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இரண்டு விமான பயணிகளிடமிருந்து 2.3 கிலோ தங்கம் பறிமுதல்