ETV Bharat / city

கழிவுநீரை மழைநீர் வடிகாலுடன் இணைத்தவர்களிடம் விதிமீறலுக்காக ரூ.19.52 லட்சம் அபராதம் வசூல்!

author img

By

Published : May 26, 2022, 6:05 PM IST

சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால்களில் விதிகளை மீறி கழிவுநீரை வெளியேற்றி வந்த 2,983 கழிவுநீர் குழாய்களை மாநகராட்சி துண்டித்து சம்பந்தபட்டவர்களிடம் இருந்து ரூபாய் 19 லட்சத்து 52 ஆயிரம் அபராதம் வசூல் செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்காக மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன. மழைநீர் வடிகால்கள் இல்லாத பகுதிகளில் புதிதாக அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

பருவமழைக் காலங்களில் மழைநீர்கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக, மழைநீர் வெளியேறாமல் தேங்கும் நிலை உள்ளதாகத் தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கு முக்கியக் காரணம், மழைநீர் வடிகால்கள் வழியாக கழிவுநீர் வெளியேற்றப்படுவதே எனக் கண்டறியப்பட்டு, வடிகால்கள் வழியாக கழிவுநீரை வெளியேற்ற மாநகராட்சி தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தற்போது மழைநீர்வடிகால்கள் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் மாநகராட்சி முழுவதும் நடைபெற்று வருவதால், விதிமீறல் இணைப்புகளைக் கண்டறிந்து துண்டிக்க மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 3,799 கழிவுநீர் இணைப்புகள், மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றி வந்தததை, மாநகராட்சி அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர்.

மாநகராட்சி உதவி மற்றும் இளநிலைப் பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர், கழிவுநீர் அகற்றல் வாரிய உதவி பொறியாளர் கொண்ட குழு சென்னை மாநகராட்சி முழுவதும் மேற்கொண்ட கள ஆய்வில் 2,983 முறையற்ற கழிவுநீர் இணைப்புகள் கண்டறிந்து அகற்றப்பட்டுள்ளன.

மேலும், அதிகபட்சமாக சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் 1,628 சட்டத்திற்குப் புறம்பான முறையற்ற கழிவுநீர் இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மாநகராட்சி ஆணையர், விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.19.52 லட்சம் அபராதம் விதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அடிப்படை வசதிகள் இன்றி தலைநகரின் முக்கிய பேருந்து நிலையங்கள்...நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.