சென்னை: இந்திய குடியரசு கட்சியின் தமிழ்நாடு தலைவர் எம்.ஏ.சூசை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஜூன் 19) சந்தித்தார்.
சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் சந்தித்த அவர்,"அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்துள்ளது. இதனால் அதிமுகவில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இந்த ஒற்றைத்தலைமை விவகாரத்தால் அதிமுகவின் மேல்மட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பாதிக்கப்படுவார்கள்.
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றுகூடிப்பேசி ஒரு சுமூக முடிவை எடுக்க வேண்டும். இப்படி ஒற்றைத் தலைமை விவகாரத்தை பொது வெளியில் கொண்டு வந்தால் பிற கட்சியினர் வேடிக்கை பார்ப்பார்கள். தொடர் லாக்அப் மரணங்களுக்கு எதிராக சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நாளை (ஜூன் 20) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதற்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக இங்கே வந்தோம். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சார்பாக இந்திய குடியரசு கட்சியின் ஆதரவு எப்போதும் இருக்கும்" என கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் - ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்குப்பின் முன்னாள் அமைச்சர்கள் ஈபிஎஸ் உடன் ஆலோசனை