ETV Bharat / city

பிரபல ரவுடி சின்ன சிவக்குமார் கைது! - Rowdy Chinna Sivakumar arrested at Valasai in villupuram district

சென்னை: செஞ்சி அருகே உள்ள வலசை பகுதியில் பிரபல ரவுடி சின்ன சிவக்குமார் தனது கூட்டாளி ராஜ்குமாருடன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பிரபல ரவுடி சின்ன சிவகுமார் கைது!
author img

By

Published : Oct 23, 2019, 4:56 AM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வலசை என்னும் பகுதியில் பிரபல ரவுடி சின்ன சிவக்குமார் தனது கூட்டாளி ராஜ்குமாருடன் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர், இருவரையும் கைது செய்து மயிலாப்பூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பட்டாகத்திகள்

அவர்களிடமிருந்த எட்டு பட்டாக்கத்தி, ஒரு துப்பாக்கி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் சமூக விரோத செயலில் ஈடுபடும் நோக்கில் திட்டம் தீட்டி அங்கு பதுங்கியிருந்தது தெரிய வந்தது.

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி சின்ன சிவக்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வீசி பெண் வழக்கறிஞரை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க :

தீபாவளி கூட்டத்தில் திருடும் கும்பல் கைது

Intro:Body:சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி சின்ன சிவகுமார் தனது கூட்டாளி ராஜ்குமாருடன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வலசை பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செஞ்சி அருகே உள்ள வலசை என்னும் பகுதியில் பிரபல ரவுடி சின்ன சிவக்குமார் தனது கூட்டாளி ராஜ்குமாருடன் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் அடுத்து அங்கு சென்று போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி சின்ன சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளி ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் மயிலாப்பூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல ரவுடி சின்ன சிவகுமார் மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.