ETV Bharat / city

அரசு மீன் அங்காடியில் அழுகிய மீன்கள்: முதலமைச்சரிடம் சாரு நிவேதிதா குற்றச்சாட்டு! - writer Charu Nivedita

சென்னை: அரசு மீன் அங்காடியில் அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா முதலமைச்சரிடம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

சாரு
சாரு
author img

By

Published : May 28, 2020, 12:09 AM IST

சென்னை பட்டினப்பாக்கம் அரசு மீன் அங்காடியில் எழுத்தாளர் சாரு நிவேதிதா மீன்களை வாங்கியதாகவும், அவை அழுகிய நிலையில் விற்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ட்விட்டர் அவர் எழுதியுள்ள பதிவில், “வணக்கம். நான் எழுத்தாளர் சாரு நிவேதிதா. பட்டினப்பாக்கம் அரசு மீன் அங்காடியில் மீன் வாங்கும்போது கடந்த மூன்று முறையும் கெட்டுப்போன மீனே கிட்டியது. புகார் செய்தும் பலனில்லை. இன்று 1500 ரூ.க்கு அயிலா. கெட்டதைக் கொடுத்து விட்டனர். கனிவுகூர்ந்து உதவ வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர், நடிகர் எஸ்.வி. சேகர் தனது வீட்டருகே உள்ள ஆவின் பாலகத்தில் வாங்கிய பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போய்விட்டதாக முதலமைச்சரிடம் ட்விட்டரில் குற்றச்சாட்டு வைத்த சில மணி நேரத்தில், அவருக்கு புதிய பால் பாக்கெட்டுகள் அரசு அலுவலர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த வகையில், எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் தனக்கு புதிய மீன்கள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்பதாக ட்விட்டர் வாசிகள் நக்கலடிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.