ETV Bharat / city

சாலை விதிகளை மீறுவோர் கேமரா மூலம் கண்காணிப்பு!

சென்னை: செங்கல்பட்டு முதல் திருச்சி வரை உள்ள சாலையில் ஆட்டோமேட்டிக் கேமரா பொருத்தப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

safety
safety
author img

By

Published : Jan 21, 2020, 1:33 PM IST

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா தமிழ்நாடு முழுவதும் 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி இன்று சென்னையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

சாலை விதிகளை பின்பற்றுதல், கட்டாயம் ஹெல்மெட் அணிதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்பேரணியில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர். அப்போது சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு அறிக்கைகளை, பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடங்கிய இவ்விழிப்புணர்வு பேரணி தீவுத்திடல் மைதானத்தில் நிறைவுற்றது.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ”இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைவாக உள்ளன. இதற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது வழங்கி சிறப்பித்துள்ளது. 10,000 வாகனங்களுக்கு 3 பேர் என்ற அளவில் தான் உயிரிழப்பு விகிதம் தமிழகத்தில் உள்ளது. இதற்கு முன்பாக 19 பேராக இது இருந்தது. இதை மேலும் குறைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதுமட்டுமின்றி சாலை விபத்துகள் 60 சதவீதம், ஹெல்மெட் அணியாததால் ஏற்படுகிறது. நகர்ப்புறங்களில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியத் தொடங்கியுள்ளனர். கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது, ஹெல்மெட் லாக்கையும் போட வேண்டும். காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.
ஹெல்மெட் அணியாதது, சாலை விதிகளை மீறுவது போன்றவற்றிற்கான அபராதத் தொகையை மேலும் குறைக்க பரிசீலனை செய்யப்படும்.

செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான சாலையில் ஆட்டோமேட்டிக் கேமரா பொருத்தப்பட்டு, ரேடார் சிக்னல் மூலம், அதி வேகத்தில் செல்லும் வாகனங்கள், சீட் பெல்ட் அணியாமல் செல்வோர், சிக்னலை மதிக்காமல் செல்வது உள்ளிட்ட குற்றங்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட உள்ளது “ என்று தெரிவித்தார்.

சாலை விதிகளை மீறுவோர் கேமரா மூலம் கண்காணிப்பு

இதையும் படிங்க: '5,8ஆம் வகுப்பு மாணவர்களின் திறனைக் கண்டறியவே பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது'

Intro:Body:
https://we.tl/t-VwyaRBVoTr

செங்கல்பட்டு முதல் திருச்சி வரை உள்ள சாலையில் ஆட்டோமேட்டிக் கேமரா பொருத்தப்பட்டு வாகனங்கள் கண்காணிக்க பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் 20ம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடக்கிறது. இதை ஒட்டி இன்று சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி போக்குவத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

சாலை விதிகளை பின்பற்றுதல், கட்டாயம் ஹெல்மெட் அணிதல் ஆகிய குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்பேரணியில் போக்குவரத்து துறை ஆணையர் ஜவஹர், போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து டிஜிபி பிரமோத் குமார், முன்னாள் எம்பி ஜெயவர்தன், போக்குவரத்துத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் பிரச்சார பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர். அப்போது சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுங்களை அமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடங்கிய விழிப்புணர்வு பேரணி தீவுத்திடல் மைதானத்தில் நிறைவுற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறும்போது, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைவாக உள்ளதாகவும், இதற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவப்படுத்யுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் 2018-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 43% என்ற அளவுக்கு சாலை விபத்துகள் குறைந்துள்ளது. இந்நிலையில் 10,000 வாகனங்களுக்கு 3 பேர் என்ற அளவில் தான் உயிரிழப்பு விகிதம் தமிழகத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக 19 பேராக இது இருந்ததாக கூறிய அவர், இதை மேலும் குறைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

அதுமட்டுமின்றி சாலை விபத்துகளில் 60 சதவீதம் ஹெல்மெட் அணியாததால் ஏற்படுகிறது. நகர்ப்புறங்களில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியத் தொடங்கி உள்ளனர். மேலும் கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

அதேபோல் ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது; ஹெல்மெட் லாக்கையும் போட வேண்டும். காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் தெரிவித்தார்

இந்நிலையில் ஹெல்மெட் அணியாதது, சாலை விதிகளை மீறுவது போன்றவற்றுக்கான அபராதத் தொகையை மேலும் குறைக்க பரிசீலனை செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு முதல் திருச்சி வரை யிலான சாலையில் ஆட்டோமேட்டிக் கேமரா பொருத்தப்பட்டு ரேடார் சிக்னல் மூலம் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள், சீட் பெல்ட் அணியாமல் செல்வது, சிக்னலை மதிக்காமல் செல்வது உள்ளிட்ட குற்றங்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப் பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.